கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சிவாஜியை முந்திய குருவி!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
webdunia photoWD
பீர் அபிஷேகம், பிரமாண்டமான ஓபனிங், பிரமாதமான கூட்டணி. எல்லாம் இருந்தும் எதிர்பார்த்த அளவு இல்லையாம் குருவி. சைலண்டாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் ஒரு செய்தி.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜியையே சைக்கிள் கேப்பில், ஸாரி... தியேட்டர் கேப்பில் தாண்டியிருக்கிறது குருவி. இதுவரை ஒரு காம்ப்ளக்ஸில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனை சிவாஜிக்கு இருந்தது.

சென்னையிலுள்ள மல்டி ஃபினிக்ஸ் ஒன்றில் 25 காட்சிகள் (ஒரு தினத்தில்) திரையிடப்பட்டது சிவாஜி. இந்த சாதனையை குருவி முறியடித்திருக்கிறது.

தமிழ் திரையரங்கு சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரே நாளில் 33 காட்சிகள் குருவி திரையிடப்பட்டது. இளம் ஹீரோக்கள் யாரும் அண்ட முடியாத அபார சாதனை இது. தசாவதாரம் குருவியின் சாதனையை உடைத்தால்தான் உண்டு.