கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சென்னை மற்றும் பிற பகுதிகள் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் 'நியூட்டனின் மூன்றாம் விதி' இயக்குனர் தாய் செல்வா. எஸ்.ஜே. சூர்யா வித்தியாசமான பாத்திரத்தில், வழக்கமான இரண்டு அர்த்த வசனம் எதுவும் இல்லாமல் ஆக்சன் கலந்த காதல் படத்தில் நடிப்பது இது முதல் முறை.

இப்படத்தின் இயக்குனர் தாய் செல்வா. சின்னத்திரையில் பல தொடர்களை இயக்கி பின் பெரிய திரைக்கு வந்த இயக்குனர் சமுத்திரக்கனியிடமும், இதே பாணியில் பெரிய திரைக்கு வந்த 'மெட்டி ஒலி' திருமுருகனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். இந்த இரண்டு இயக்குனர்களின் வழியில் இவரும் ஜெயா டி.வி.யில் 'யார்?' என்ற மர்மத் தொடரை இயக்கிவிட்டு பின் இந்தப் படம் மூலம் பெரிய திரைக்கு வந்திருக்கிறார் தாய் செல்வா என்கிற தாய் செந்தில்குமார்.

இவரின் குருவைப் போல இவரும் வெள்ளித்திரையில் பெரிய வெற்றி பெறவேண்டுமென்றால், சீரியல் பாணியை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். வெற்றி பெற வாழ்த்துவோம். அதேபோல் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இந்தப் படத்தின் மூலமாக ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தும் வரட்டும்.