கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » அனுசரிக்கும் தமன்னா!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
webdunia photoFILE
'கல்லூரி' படத்தின் நாயகி தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்தது. என்றாலும், இதன் நாயகிக்கு ஏகப்பட்ட படங்கள் குவியத் தொடங்கிவிட்டன.

அழகு மட்டும் இல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்வார். அதுமட்டும் இல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதுவேண்டும், இதுவேண்டும் என்று பந்தா பண்ணமாட்டார்.

எல்லோரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளும் நடிகையும் கூட, எனவே அவரின் அழகும், நடிப்பின் திறமையும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்தின் கண்களை உறுத்த, சூர்யாவை வைத்து தான் இயக்கும் 'அயன்' படத்தின் நாயகியாக்கிவிட்டார்.

அதேபோல், தற்போது 'ஆனந்த தாண்டவம்' இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கும் படம். இதையடுத்து 'படிக்காதவன்' தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து படங்கள் கிடைக்க, நீங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குளிக்க 'பிஸ்லரி வாட்டர்' தான் வேண்டுமென்றெல்லாம் அடம்பிடிக்கக்கூடாது. என்ன தமன்னா சரியா!