முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெள்ளித்திரை சர்ச்சை : சரத் கருத்து!
நடிகர்கள் பட்டம் வைத்துக்கொள்வதை வெள்ளித்திரையில் விமர்சித்திருந்தார் இயக்குனர் விஜி. வார்த்தை விஜியுடையது என்றாலும் பேசி நடித்தது பிரகாஷ் ராஜ் என்பதால், பிரஸ்மீட்டில் அவரிடமே இதுகுறித்து கேட்கப்பட்டது.

சினிமாவுக்கு வந்து நாலு படம் நடிக்கும் முன்பே சின்ன தளபதி, புரட்சி தளபதின்னு பெயர் வைக்கிறதைத்தான் விமர்சித்திருந்தோம். மற்றபடி அனுபவனமுள்ள நடிகர்கள் பட்டம் வைப்பது பற்றி எதுவும் சொல்லலை என விளக்கமளித்தார் பிரகாஷ் ராஜ்.

அவரது விளக்கத்தால் பரத், விஷால் போன்றவர்கள் உள்ளுக்குள் பொசுங்கினாலும், பெரிய நடிகர்களுக்கு நிம்மதி. நம் தலையில் கை வைக்கவில்லையே!

இதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டதற்கு, பிரகாஷ் ராஜ் கூறியது அவரது சொந்தக் கருத்து. இதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை என்று நழுவிக் கொண்டார். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் எந்த நடிவடிக்கையும் எடுக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும்
மீண்டும் முதல்வர் மகன்!
நான் ஒரு ராஜா மகன்!
எளிமையாக நடந்த அயன் தொடக்க விழா!
ஏவி.எம். தயாரிக்கும் தெலுங்குப் படம்!
கண்ணபிரானை கைவிடுகிறார் அமீர்?
தசாவதாரத்தில் திருமாவளவன்!