கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » க‌ட்டுரை » ஒரு புதன்கிழமை – முட்டாள் பொது மக்களின் குமுறல்!
க‌ட்டுரை
Feedback Print Bookmark and Share
 
இந்தியாவில் பெருகிவரும் பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது, நீரஜ் பாண்டேயின் ஒரு புதன்கிழமை. தினந்தோறும் வெடிக்கும் குண்டுகள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பதட்டம் நிறைந்ததாக மாற்றியுள்ளது. கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்குச் செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.

எந்த இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தாலும் முதலில் கொல்லப்படுகிறவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருக்கிறார்கள். பயங்கரவாதத்தை களைந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சர்க்கார், கையறு நிலையில், பதவியை தக்க வைத்துக் கொள்ள காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறது.

வீட்டைவிட்டு கிளம்பினால் உயிரோடு திரும்பி வருவோமா என்ற உத்தரவாதமில்லாத அன்றாட வாழ்க்கையை வாய்க்கப்பெற்ற அப்பாவி பொதுமக்கள், இதுபோன்ற சூழலில் என்ன செய்வார்கள்? “எதுவும் என்கிறத” நீரஜ் பாண்டேயின் ஒரு புதன்கிழமை.
webdunia photoFILE

மும்பை காவல் ஆணையர் பிரகாஷ் ரத்தோருக்கு (அனுபம் கெர்) அனாமதேய போன் கால் வருகிறது. மும்பையின் ஐந்து இடங்களில் குண்டுகள் வைத்திருப்பதாக அந்த போன் கால் தெ‌ரிவிக்‌கிறது. அந்த குரலுக்கு‌உரியவர் (நஸ்ருதீன் ஷா) மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும், இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் என்கிறார். காவல்துறை பதற்றமடைகிறது.

குரலுக்கு‌ரியவரை தேடும் முயற்சியில் தோல்வியடையும் காவல்துறை நான்கு தீவிரவாதிகளையும் அவர் சொன்ன இடத்தில் விட்டு விடுகிறது. அந்த இடத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தீவிரவாதிகளை சாகடிக்கிறார் நஸ்ருதீன் ஷா.

கமர்ஷியல் சினிமாவான ஒரு புதன்கிழமையில் வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு‌ரிய அத்தனை இலக்கணங்களும் மீறப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்துகிறவர் சூப்பர் ஹீரோ அல்ல. வயதான ஒரு சாதாரண குடிமகன். அனுபம் கெர்‌ரிடம் நஸ்ருதீன் ஷசொல்வதுபோல, ‘போலீஸைப் பார்த்து பயப்படும் ஒரு ஸ்டுபிட் காமன் மேன’. காதல், பாடல்கள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை பகுதிகள் அனைத்தும் இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் காலையில் தொடங்கி மாலையில் முடிகிறது படம்.

போலீஸ் கமிஷனர் அனுபம் கெர், நஸ்ருதீன் ஷா, சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், தொலைக்காட்சி நிருபர். இந்த ஐவருமே படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத இவர்களின் அன்றாட அலுவல்கள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. சாதாரண கமர்ஷியல் படமான ஒரு புதன்கிழமையை அசாதாரணமான படமாக மாற்றுவது இந்தக் காட்சிகள்தாம்.

அனுபம் கெர்‌ரின் அன்றைய நாள் இந்தி நடிகர் ஒருவருடன் தொடங்குகிறது. திரையில் சூப்பர் ஹீரோவாக வரும் அந்த நடிகர், பணம் கேட்டு தன்னை சிலர் போனில் மிரட்டுவதாகவும், எப்படியேனும் அவர்களிடமிருந்து காப்பாற்றும்படியும் அழுகிறான்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: A Wednesday ஒரு புதன்கிழமை நீரஜ் பாண்டே பொதுமக்கள் அனுபம் கெர் நஸ்ருதீன் ஷா