இந்த இயக்குனர்கள் சீனா, கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், நியூஸிலாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நிலப்பரப்பை சேர்ந்தவர்கள். தங்கள் நிலப்பரப்பின் கலையை, கலாச்சாரத்தை. பிரச்சனைகளை எவ்வித சமரசமும் இன்றி கலாபூர்வமாக முன் வைப்பார்கள், கேன்ஸ், பெர்லின் உள்ளிட்ட முக்கியமான திரைப்பட விழாக்களில் இவர்களது படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
ஹாலிவுட் இயக்குனர் குவென்டின் டெரான் டினோவின் திரைக்கதையில் உருவான 'Palp Fiction' அதன் திரைக்கதைக்காக இன்றும் கொண்டாடப்படுகிறது. கான்ஸ், ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளை இப்படம் பெற்றது.
ஹாங்காங்கைச் சேர்ந்த வாங் கர் வாய் ’In the mood for Love, '2006' படங்களின் வாயிலாக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை முன்னிறுத்துபவை இவரது படங்கள்.
உலக புரட்சியாளர் சே குவேரா தனது 23வது வயதில் தனது நண்பனுடன் சேர்ந்து மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் பிரசித்தமானது. அவரது டைரிக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றவர் வால்டர் செலஸ்.
சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் ஷாங் இமு. 'ரோடு ஹோம், நாட் ஒன் லெஸ் போன்ற மென்மையான திரைப்படங்களை இயக்கிய ஷாங் இமு, ஹாலிவுட் சென்று 'ஹீரோ', 'ஹவுஸ் ஆஃப் பிளையிங் டேகர்ஸ்' போன்ற சாகசப் படங்களை இயக்கி அங்கும் தடம் பதித்து வருகிறார்.
இத்தாலி இயக்குனர் டொர்னாடோ குசாயின் 'cinema Paradiso', 'Malena', 'Star maker' உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவை.
இப்படி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த பத்து இயக்குனர்களை அவர்களின் பிராந்தியம் மற்றும் படங்களின் பின்னணி சார்ந்து விளக்கிச் செல்வதன் ஊடாக சமகால உலக சினிமாவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இந்த புத்தகங்களின் வரவு வர்த்தகத்தில் மட்டுமின்றி ரசனையிலும், திரைக்கதையிலும் அழுத்தமான சுவடை பதித்துள்ளது. 'தமிழில் ஒரு ஈரானிய சினிமா', ' தமிழில் ஒரு உலக சினிமா' என்பதான தமிழ்ப் படங்களின் விளம்பரங்கள் இந்த பாதிப்பின் பிரதிபலிப்பே தவிர வேறில்லை! |