நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு

மும்பை| Webdunia|
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அதிகாரி நிலையிலான காலியிடங்களுக்கு பொறியியல், கலை மற்றும் அறிவியில் முதுநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இதில் நிர்வாக அதிகாரி பணியிடம் பொது மற்றும் சாஃப்ட்வேர் நெட்வொர்க்கிங் என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பொது அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்களில் அக்கவுண்ட்ஸ், சட்டம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஃப்ட்வேர் நெட்வொர்க்கிங் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி. ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி (50 இடங்கள்) பணிக்கு ஐ.டி. அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்.ஈ/எம்.டெக்/எம்.சி.ஏ./ ஐ.டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பணி அலுவலர் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ள 310 பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு ஒன்றில் குறைந்தது 60% மதிப்பெண், பட்டமேற்படிப்பு என்றால் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மே 31ஆம் தேதி (2009) அன்று 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு துவக்கத்திலேயே ரூ.18 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கும்.
இப்பணிக்கான போட்டித் தேர்வு அக்டோபர் 25, 2009 அன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. ரீசனிங், கணிதம், டேட்டா இன்டர்ப்ரடேஷன், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய பகுதிகளில் அப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் கேட்கப்படும். இதே போல் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெடஎன்ற பெயருக்கு (மும்பையில் மாற்றத்தக்க வகையில்) ரூ.500 மதிப்புகான டி.டி. எடுத்து, அதனுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணைத்து Post Box No.7641, Malad (West), Mumbai - 400064 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை newindia.co.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், இப்பணி தொடர்பான மேலும் பல தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :