ஆல்-இந்தியா வானொலி, தூர்தர்ஷனில் 11,000 காலிப் பணியிடங்கள்

புதுடெல்லி| Webdunia| Last Modified செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (13:00 IST)
தூர்தர்ஷன், ஆல்-இந்தியா வானொலியில் முறையே 4,221 மற்றும் 7,277 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் மோகன் ஜாதுவா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று இதனைத் தெரிவித்த அவர், பொறியியல் பிரிவில் ஆல்-இந்தியா வானொலியில் 1,284 இடங்களும், தூர்தர்ஷனில் 2,714 இடங்களும் காலியாக உள்ளதாகவும், நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவில் தூர்தர்ஷனில் 736 இடங்களும், ஆல்-இந்தியா வானொலியில் 3,010 இடங்களும் காலியாக உள்ளதாகவும் கூறினார்.

இதுதவிர செய்திப் பிரிவில் மொத்தம் 94 இடங்கள் காலியாக உள்ளதாக ஜாதுவா குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :