பொருளாதார மாற்றத்துக்கான அரசாக பாஜக அரசு அமையாது - நல்லகண்ணு

Ilavarasan| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:42 IST)
பொருளாதார மாற்றத்துக்கான அரசாக பாஜக அரசு அமையாது என்று நல்லக்கண்ணு கூறினார்.
இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காங்கிரசுக்கு மாற்றான அரசாகக் கொண்டு வருவதாக பாஜக கூறுகிறது; மக்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தி மாற்றம் கொண்டு வர இடதுசாரி கட்சிகள் தேர்தலை சந்திகின்றன.

நாகை தொகுதி விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் அடங்கியதாகும். விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரிக்கை, மக்களின் உரிமைகளுக்காக என இடதுசாரிகள் மனித சங்கிலிப் போராட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளது.
சமூக மாற்றத்துக்கான போராட்டங்களை நடத்தியுள்ளது. எனவே நாகையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :