ஆந்திரா பவர் ஸ்டார் பவன் கல்யாண் கட்சி பாஜகவுடன் கூட்டணி

Webdunia| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:32 IST)
ஆந்திராவின் முன்னனி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் புதிதாக ஆரம்பித்த ஜன சேனா கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
FILE

தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான சிரஞ்சீவியின் சகோதரர் நடிகர் பவன் கல்யாண் கடந்த வாரம் ஜன சேனா என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.

இன்று டெல்லி செல்லும் அவர் பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் அகமதாபாத் சென்று பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பாஜக - ஜன சேனா கூட்டணி ஏற்பட்டால் அவர் காங்கிரஸ் கட்சியின் சீமாந்திரா மாநில முதல்வர் வேட்பாளரான தனது சகோதரர் சிரஞ்சீவியை எதிர்த்து களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் இணையவுள்ள சூழ்நிலையில் பவன் கல்யாணும் அக்கூட்டணியில் இணைவது இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சி பலத்த சரிவை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :