நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக ராகுல் காந்தி தேர்வு

Webdunia|
FILE
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பா.ஜ.க. நரேந்திர மோடியையும், ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலையும் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தலைவர்கள் கருதுகிறார்கள்.இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து தறிவித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி, ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக ராகுல் காந்தி பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கும் வழக்கம் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :