செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By Webdunia
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (15:51 IST)

அகத்தின் இருளை ஒழித்து உள் ஒளியை காண்பதே தீபாவளி!!!

திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

 
தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் (அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவைப் பெறும்) இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.
 
தீயன அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் (தீப + ஆவளி-வரிசை) விளக்குகளின் வரிசை எனப் பொருள்பெறும். தீபாவளி தினம் நாம் வீட்டில் தீபங்கள் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சம் கொண்டு வருவது போல் அகத்து இருள் நீங்க அகத்திலும் ஒளி விளக்கு ஏற்றி உள் ஒளி பெருக்கிடல் வேண்டும்.
 
மகாலட்சுமி பூஜை
 
கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.
 
லட்சுமி குபேர பூஜை
 
தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.
 
குபேர பூஜையில் நாம் சொல்லவேண்டிய மந்திரம்:
 
“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’.