வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

சென்னையில் எனக்கு நடந்த அந்த சம்பவம்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் கொக்கைன் போதைக்கு அடிமையாக இருந்ததாகவும், அந்த பழக்கம் தன்னுடைய முதல் மனைவி இறந்த பின்னர்தான் முடிவுக்கு வந்தது என்றும் அவர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுதியது பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில் வாசிம் அக்ரம் சென்னை விமான நிலையத்தில் தனக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “2009ல் நான் சிங்கப்பூர் சென்ற போது விமானத்தில் எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிரக்கினார்கள். அப்போது என் மனைவி மயக்கமடைந்து சுய நினைவை இழந்தார். என்னிடம் அப்போது இந்திய விசா இல்லை. அப்போது சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாவைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என நம்பிக்கை அளித்தனர். அந்த நாளை என் வாழ்வில் நான் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.