ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (19:12 IST)

T-20 முதல் போட்டி- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி!

india-srilanka
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா அணி த்ரில்  வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை டாஸ் வென்று பந்து வீசிய நீலையில், இன்றைய போட்டியில், கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதில்,இஷான் கிஷன் 37 ரன்களும், கில் 7 ரன் களும்,சூர்யகுமார் 7 ரன்களும், பாண்ட்யா 29 ரன்களும்,, ஹூடா 41 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 162 ரன்கள் அடித்து,இலங்கைக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் மெண்டிஸ் 28 ரன்களும், அசலங்கா 12 ரன்களும், ராஜஜபக்சே 10 ரன்களும், சனகா 25 ரன்களும், ஹ்சரன்கா 21 ரன்களும், கருணாரத்னே 23 ரன் களும் அடித்தனர்.

கடைசியில் 2 பந்துக்கு 3  ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான   நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சாளரின் திறமையால், எனந்த ரன் களும் கொடுப்படவில்லை.

எனவே,3  ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்று 3க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவின் சிவம் மவி 4 விக்கெட்டுகளும், படேல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.