வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:34 IST)

இந்திய அணிக்கு எதிராக மூன்று புதியவர்களை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா – அனல்பறக்கும் ஆட்டம் அடுத்த மாதம்

அடுத்த மாதம் நடக்க இருக்கும் சுற்றுத்தொடர் ஆட்டத்தில் இந்திய அணியை வெற்றி பெற பலமாக தயாராகி வருகிறது தென் ஆப்பிரிக்க அணி.

தென் ஆப்பிரிக்க அணி வரும் செப்டம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் 20 ஓவர்கள் கொண்ட டி20 தொடர் மூன்று ஆட்டங்களும், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடர் மூன்று ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா பலத்த அடி வாங்கியதால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியாவுடன் விளையாட உள்ளதாக் இளம் வீரர்கள் மூன்று பேரை அணியில் இணைத்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

உலக கோப்பையில் கேப்டனாக இருந்த பாப் டு ப்ளசிஸ் இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக தொடர்கிறார். விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக் நார்சே, ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி, விக்கெட் கீப்பர் ரூடி செகண்ட் ஆகியோர் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா தனது பந்து வீச்சில் வலைமையை காட்டி இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டிருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான இந்த போட்டி அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.