திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (15:02 IST)

‘நீ பந்து போடு… நான் சிக்ஸ் அடிக்கிறேன்’ – SRH பவுலரிடம் சொல்லி அடித்த சுப்மன் கில்!

இந்திய அணியில் சமீபத்தில் இடம்பிடித்து மூன்று வகையான போட்டிகளிலும் கலக்கி வருகிறார் இளம் வீரர் சுப்மன் கில். இப்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நேற்றைய SRH அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் குஜராத் அணிக்காக 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் பேசிய கில் “என் ஐபிஎல் அறிமுகப் போட்டி ஐதராபாத் அண்க்கெதிராகதான் நடந்தது. இப்போது என் முதல் சதமும் அந்த அணிக்கு எதிராகவே வந்துள்ளது. அபிஷேக் சர்மா பந்தில் சிக்ஸ் அடித்ததில் மகிழ்ச்சி. அவரிடம்  ‘நீ பந்து வீசினால் நான் சிக்ஸ் அடிப்பேன்’ எனக் கூறியிருந்தேன். “ எனப் பேசியுள்ளார்.