திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (07:36 IST)

வென்றது SRH ஆக இருக்கலாம்… ஆனா ரசிகர்களின் இதயங்களை வென்ற இரு பஞ்சாப் வீரர்கள்!

ஐபிஎல்-2024  லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய 23 ஆவது போட்டியில், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

எனவே சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில், ஹெட் 21 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 64 ரன்னும், அப்துல் சமட் 25 ரன்னும், சபாஷ் அகமத் 14 ரன்னும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து ஆடவந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் மீண்டெழுந்தது. அந்த அணியின் ஷஷாங்க் மற்றும் அஷுடோஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி கடைசி பந்துவரை திரில்லிங்கான அனுபவத்தை கொடுத்தனர்.

ஷஷாங்க் 25 பந்துகளில், 46 ரன்களும், அஷுடோஷ் ஷர்மா 15 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 180 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து 25 ரன்கள் சேர்த்தனர். ஆனால் நூலிழையில் வெற்றி பறிபோனது. ஆனாலும் இவர்களின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.