திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஜனவரி 2024 (10:15 IST)

நான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் போது விராட் கோலி அதில் குறியாக இருந்தார்… பண்ட் பகிர்ந்த தகவல்!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அர்ப்பணிப்பு குறித்து கூறியுள்ளார். அதில் “நான் 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது கோலியும் ரவி சாஸ்திரியும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்” எனக் கூறியுள்ளார்.