திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:22 IST)

ஷாருக் கான் யார் என்றே எனக்கு தெரியாது… ஐபிஎல் ஏல புகழ் ரிச்சர்ட் மேட்லி ருசிகரம்!

இன்னும் சில ஐபிஎல் தொடரின் 2022 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடக்க உள்ளது.

ஐபிஎல் ஏலம் என்றதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவர் ரிச்சர்ட் மேட்லி. பல வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை அறிமுகப்படுத்தி, ஏலத்தை சுவாரஸ்யமாக நடத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யுடியூப் பக்கத்தில் அவரை நேர்காணல் செய்தார்.

அப்போது ஐபிஎல் முதல் ஏலத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் மேட்லி. அதில் ‘2008 ஆம் ஆண்டு ஏலம் முடிந்த பின்னர் என்னை அனுகிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷாருக் கானோடு இருந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார். எனக்கு அப்போது ஷாருக் கான் யார் என்றே தெரியாது. அப்போது எனக்கு பாலிவுட் பற்றியே அதிகம் தெரியாது. அதன் பின்னர்தான் ஷாருக் கான் யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.