திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:37 IST)

எம் ஆர் எஃப் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி எம் ஆர் எஃப் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரார் கோலி தன்னுடைய எம் ஆர் எஃப் நிறுவனத்தின் விளம்பரத்தை ஏற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின்னர் அவர் பேட்டில் பூமா நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது.

இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின், வெஸ்ட் இண்டீஸின் லாரா, தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகிய சில வீரர்களே எம் ஆர் எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.