திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மே 2024 (21:56 IST)

கோலி, படிதார் அபார ஆட்டம்… பஞ்சாப் பவுலர்களை துவம்சம் செய்து நிர்ணயித்த இமாலய இலக்கு!

இன்று நடக்கும் 58 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளும் ப்ளே ஆஃப் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டன. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே அந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆர் சி பி அணியில் டு பிளசீஸ் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஜத் படிதாரோடு இணைந்து கூட்டணி அமைத்தார் கோலி. ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்களும் அதிரடியில் இறங்க ரன்ரேட் 12 ஐ தாண்டு சென்றது.

அதிரடியாக ஆடிய கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 46 ரன்கள் சேர்க்க, ஆர் சி பி அணி 7 விக்கெட்களை இழந்து 241 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த இமாலய இலக்கை பஞ்சாப் அணியால் துரத்தி பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.