ரோகித் சர்மா சொன்னதுல தப்பு எதுவும் இல்ல! – ஆதரவு கரம் நீட்டிய ஜோ ரூட்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:48 IST)
இந்திய கிரிக்கெட் பிட்ச்கள் குறித்த சர்ச்சைக்கு ரோகித் சர்மா பேசிய கருத்துக்கு ஜோ ரூட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற விகிதத்தில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பிட்ச்கள் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக உள்ளதாகவும் இங்கிலாந்து வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள ரோகித் ஷர்மா “அந்தந்த நாட்டு பிட்சுகள் அவரவர் தேவைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டுள்ளன. வேறு நாடுகளுக்கு நாங்கள் செல்லும்போதும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறோம். வீரர்களின் திறமையை பற்றிதான் பேச வேண்டுமே தவிர பிட்ச்சை பற்றியல்ல” என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜோ ரூட் “அவரவர் தாய் நாடு அவரவருக்கு சாதகமாக இருப்பது வாஸ்தவமே” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :