பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய பதவியையும் துறந்தார். இதையடுத்து குறுகிய காலத்தில் பாகிஸ்தான் அணியில் நிறைய கேப்டன்சி மாற்றங்கள் நடந்தன.
இந்நிலையில் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜேசன் கில்லஸ்பி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மொத்தமே 42 நாட்கள்தான் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.