திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (07:45 IST)

இந்திய அணியில் பிட்னஸ் கலாச்சாரத்தைக் கொண்டுவந்தவர் கோலிதான்.. சக வீரர் பாராட்டு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருபவர். தனது பேட்டிங் சாதனைகளுக்காக மட்டுமில்லாமல் உடல்நலத்தைப் பேணுவதிலும் கோலி பலருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

இந்திய அணியில் கோலிக்கு பிறகுதான் இளம் வீரர்கள் உடல் பிட்னஸ் பற்றிய அக்கறைகளில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். இதைப் பற்றி பேசியுள்ள கோலியின் சக வீரரான இஷாந்த் சர்மா “இந்திய அணியில் பிட்னஸ் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தவர் கோலிதான்” என பாராட்டியுள்ளார்.

கோலியும் இஷாந்த் சர்மாவும் டெல்லியை சேர்ந்தவர்கள். இருவருமே சிறுவயது முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி இந்திய அணிக்காக தேர்வானவர்கள். ஆனால் கோலிக்கு முன்பாகவே இஷாந்த் சர்மா இந்திய அணியில் தேர்வாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.