”ஸ்பின்னர்களை களமிறக்குங்கள்”.. ஹர்பஜன் அறிவுரை

Harbhajan Singh  suggests Spinners for 2nd ODI
Arun Prasath| Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:14 IST)
ஹர்பஜன் சிங்

நியூஸிலாந்துக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்பின் பவுலர்களை களமிறக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியும் தோல்வியை கண்டது.

இந்நிலையில் இது குறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும், இப்போதுள்ள நியூஸிலாந்து அணி எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு எளிதாக விளையாடிவிடும்” என கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்த ஹர்பஜன் சிங், “சுழற்பந்து வீச்சாளர்கலை எதிர்கொள்ளும்போது நியூஸிலாந்து வீரர்கள் திணறுவார்கள்” எனவும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :