வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (17:37 IST)

இதை செய்யாவிட்டால் எப்போதும் தொடரை வெல்ல முடியாது: கங்குலி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணி ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியில் தன்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதனால் பலர் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கங்குலி பின்வருமாறு பேசியுள்ளார்...
 
இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமைக்குறைவாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பேற்க வேண்டும். 
 
இந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்காவிட்டால், வெளிநாடுகளில் சென்று தொடரை வெல்ல முடியாது. இந்த டெஸ்ட் தொடரின் முடிவுக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பு ஏற்க வேண்டும்.
 
இந்த மாதிரியான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்திய அணி நீண்டநாட்கள் சர்வதேச அளவில் பயணிக்க முடியாது. தற்போது அணியில் இருக்கும் வீரர்களின் திறமை, பேட்டிங் திறன் தரம் தாழ்ந்துவிட்டது என்றே நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.