திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (09:26 IST)

கோலி நோ பால் கேட்டது தவறு… வன்மத்தைக் கக்கிய கம்பீர்!

நேற்று நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் ராகுல், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 184 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கோலி, 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி கடைசிவரை போராடி தோற்றது. இந்த போட்டியில் கோலி பேட் செய்யும் போது பங்களாதேஷ் வீசிய பவுன்சருக்கு நோ பால் கேட்டார். அதையடுத்து நடுவர் நோ பால் அளித்தார். ஆனால் கோலி, நோ பால் கேட்டு நடுவரின் முடிவில் அழுத்தத்தை ஏற்படுத்துக்கிறார் என பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் வாதிட்டார். இது சம்மந்தமாக கோலியும், ஷகீப்பும் களத்தில் விவாதித்து சமாதானம் அடைந்தனர்.

இதுபற்றி பேசியுள்ள கம்பீர் “ஒரு பேட்ஸ்மேன் நடுவரிடம் இதுபொல கேட்பது சரியல்ல. அவரின் வேலை பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடுவதுதான்” எனக் கூறியுள்ளார். வழக்கமாக கோலி மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருபவர் கம்பீர். அதனால் அவரின் இந்த கமெண்ட் ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதில்லை.