ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (12:40 IST)

தனி ஆளாக போராடும் ரூட்… இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதையடுத்து இந்திய அணி ரோஹித் மற்றும் கில் ஆகியோரின் அபாரமான சதத்தை அடுத்து 477 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

அந்த அணியின் ஜோ ரூட் மட்டும் தனி ஆளாக போராடி வருகிறார். ஆட்டத்தின் போக்கைப் பார்த்தால் மூன்றாவது நாளுக்குள்ளாகவே இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.