ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (13:39 IST)

ரசிகையின் காலில் விழுந்து வணங்கிய தோனி

Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனிக்கு  உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவரிடம் ஆசீர்வாதம் வாங்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், அவர் ஒரு பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள தன் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது. திடீரென்று ஒரு ரசிகையின் காலில் விழுந்து வணங்கினார் தோனி. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தோனியின் காலில் விழ பல வீரர்கள் தவமிருக்கையில் தோனி இத்தனை பண்புடன் ரசிகையின் காலில் விழுந்து வணங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.