பேனா

Webdunia|
எழுத்தை வரையும் பேனா
போற்றியேக் காக்க வேணும்!
கழுத்தின் அருகில் பிடித்து-எழுத
காகிதம் அழகாய் தோணும்.

கவிஞர் நாவல் ஆசான் - நல்ல
கருத்தைச் சொல்ல உதவும்!
புவியில் மாற்றம் வரவே! - பேனா
உண்மை என்றும் கூறும்.

தேர்வில் நன்றாய் எழுத - என்றும்
தேவை பேனா ஒன்று!
பார்ப்போற்றும் மார்க்ஸும் - அதனால்மூலதனமும் படைத்தார் அன்று!

நண்பர் இரவல் கேட்டால் - அதை
நானும் தருவேன் அன்பால்!
கண்ணின் மணியைப் போலவே - நான்
கருத்தால் காப்பேன் அறிவால்!

வாரம் ஒரு நாள் பேனாவும் - சுத்தம்
ஆகி விடுமே தவறாமல்!யாரும் உதவி கேட்டாலும்- மனம்
மகிழ்வாய் செய்வேன் உதறாமல்.


இதில் மேலும் படிக்கவும் :