விராட் கோலியால் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்: மனம் திறக்கும் அனுஷ்கா ஷர்மா

VM| Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (12:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இதற்காக தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு  இருவரும் உற்சாகமாக சுற்றி வருகின்றனர். இருவரும் தங்கள் பர்சனல் வாழ்க்கை குறித்து பல நேர்காணலில் பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் நியூசிலாந்தில் நடந்த நேர்காணலில் , அனுஷ்கா சர்மா,  கணவர் விராட் கோலி , தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கூறி  நெகிழ்ந்தார்.  இது தொடர்பாக அனுஷ்கா சர்மா கூறுகையில், "விராட் கோலியும் நானும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கை துணையாக இருக்கும் அவர் பகட்டு   இல்லாதவர். தனிநபராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் விராட்டின் நேர்மையை பார்த்து வியந்து போனேன். ஒருவொருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம். குடும்ப வாழ்க்கையிலும், தொழிலும் கண்ணும் கருத்தாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் விராட் கோலி.  நாங்கள் எதையும் பெரிதாக  எடுத்துக் கொள்ளமாட்டோம்.  ஒரே மாதிரி இருப்போம்.  இதனால் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறோம்" என்றார். 
 
அண்மையில் விராட் கோலி தனது மனைவியுடன் நியூசிலாந்தில் சுற்றும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது . 


இதில் மேலும் படிக்கவும் :