தொலைக்காட்சியையும் விடாத ப்ரியங்கா சோப்ரா

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (16:29 IST)
தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகைகளில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஒரு பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

 
சினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கும் ப்ரியங்கா சோப்ரா, இந்த உலகம் தழுவிய பட்டியலில் 4 -வது இடத்தில் உள்ளார். அவர் வருமானம் ஒரு கோடியே பத்து லட்சம் என்று போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
 
யுஎஸ்ஸில் வெளியாகும் குவாண்டிகோ தொலைக்காட்சி தொடரில் ப்ரியங்கா நடித்து வருகிறார். அதில் கிடைத்த வருமானம்தான் இது (ஒரு எபிசோடுக்கா?)
 
அதேபோல், இந்தியாவில் விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை யார் என்ற இன்னொரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ப்ரியங்கா முதலிடம் பிடித்திருக்கிறார்.
 
போர்ப்ஸ்... பொறாமையை கிளப்பாத...


இதில் மேலும் படிக்கவும் :