வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (12:17 IST)

பிரபாஸ் ஹேர் ஸ்டைலுக்கு மட்டும் 4 லட்சம் செலவழித்த இயக்குனர் - பிரம்மாண்டமே பிரமிக்குது!

பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். அந்த படத்தில் இவரது நடிப்பு வரலாறுகள் பல பேசும்படி அமைந்தது. அந்த படத்திற்கு பின்னர் அவர் கேட்காமலே ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டி கொடுக்கின்றனர்.
 
இந்நிலையில் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக பிரபாஸின் ஹேர் ஸ்டைலுக்கு மட்டும் 4 லட்சம் செலவழித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். 
 
இதை கேட்டதும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியே பிரமித்து போயிருப்பாரே என்கிறது சினிமா வட்டாரம். நிச்சயம் இந்த படம் வேற லெவல் வெற்றி படைக்கும் என கணிக்க முடிகிறது. அது சரி படம் வரட்டும் அந்த 4 லட்சம் ஹேர்ஸ்டைலை நம்ம ஊரு சலூன் கடைக்காரர்கள் 400 ரூபாயில் முடிச்சுருவாங்க...