பல்லி எத்திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் பார்ப்போமா...!

Sasikala|
நமது வீட்டின் சுவர்களில் சுற்றித் திரியும் பல்லிகளை நீங்கள் உற்றுக் கவனிப்பது உண்டா..? இல்லை என்றால் இனி கூர்ந்து  கவனியுங்கள். அவை ஒருவகையான சத்தம் எழுப்பும். அதிலிருந்து நலல்து நடக்கும், கெட்டது நடக்கும் இது போன்ற செய்திகளை நமது பாட்டி சோல்ல கேட்டதுண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

 
பல்லி கிழக்கே சொல்லுமாகில் அதன் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத ஒரு பயத்தை, அசுபச் செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம்.
 
இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சொன்னால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். குறிப்பாக உடல் நலம் இல்லாத பெரியவர்கள் மரணிப்பார்கள்.
 
தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பேசினால் உடனடியாக கலகம் வரும். இந்த நாளில் இருந்து  ஒருவாரத்திற்குள் நமது இல்லத்தில் மரணச் செய்தி வந்தடையும்.
 
தென்திசையில் இருந்து கொண்டு சொன்னால் செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிக்கும்.
 
இந்த தெற்கு திசை அடுத்த வீட்டு அல்லது அடுத்த மனையிலிருந்தோ சொல்வதாக இருந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க  செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை குறிப்பிடும்.
 
தென்மேற்கு மூலையாகிய நிருதி திசையில் இருந்து சொன்னால் அதற்கு புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்தி யிருக்கும்.  இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.
 
மேற்கு திசையில் இருந்து சொல்லுமானால் சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும். சஞ்சலமான சோதனைகளும்,  சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கு எச்சரிக்கையாகும்.
 
இதே மேற்கு திசை அல்லது வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால் உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை  எச்சரிப்பதாகும். வடதிசையாக வாயு மூலையில் இருந்து பேசுமானால் சுபச்செய்தி வரும்.


இதில் மேலும் படிக்கவும் :