ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (18:02 IST)

ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - துலாம்

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க - ராசியில் குரு பகவானின் இருப்பு அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். லாபஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதனால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் ஸ்தானத்தை லாபாதிபதி சூரியன் - பாக்கியாதிபதி புதன் - ராகு ஆகியோர் அலங்கரிக்கிறார்கள். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாண்டு விருத்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் தைரியம் அதிகரிக்கும்.

குடும்பாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு கட்சிப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும். பதவிகளைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும்.

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.  விளையாட்டுகளில் பரிசுகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவால் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

உடல்நலத்தினைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் ஏற்படலாம். வாயு பொருட்களை மிதமாக உண்பது நல்லது.

சித்திரை:
இந்த மாதம் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம், காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

ஸ்வாதி:
இந்த மாதம் பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். 

விசாகம்:
இந்த மாதம் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28