ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 09/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் இருந்தாலும் சிறிது சிரமம் இருக்கும். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து  கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க நேரிடும். கவனமாக இருப்பது அவசியம்.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பகை உண்டாகலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.
 
3. துலாம்:
 
இன்று துலா ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் ஏற்படும்.
 
4. விருச்சிகம்:
 
இன்று துலா ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும்.
 
5. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும்.  உடல்சோர்வு வரலாம். கவனமாக இருப்பது அவசியம்.