ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு செயல்களில் தாமதம் ஏற்படலாம்! இன்றைய ராசிபலன் (23-06-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அரசு சார்ந்த ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:
இன்று மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். பிரச்சனை பெரிதாகாமல் சுமூகமாக பேசி மோதல்களைத் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். வாகனங்களில் நிதானமாக பயணம் செய்வது நன்மையைத் தரும். உல்லாச பயணம் செல்லும் போது அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்த்து பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்த செயலிலும் கால தாமதம் ஏற்படலாம். பொறுமையாக கையாள்வது உங்கள் திறமை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கடகம்:
இன்று குடும்பம் சார்ந்த வேலைகள் கடினமாக தென்படும். திட்டமிட்டு செய்வது கடினத்தைக் குறைக்கும். ஏற்கனவே சேர்த்து வைத்த பணம் சுப காரியங்களுக்காக கரையலாம். சுபச்செலவாதலால் மனம் வருந்தத் தேவையில்லை. குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கண்டிப்பு தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

சிம்மம்:
இன்று உங்கள் கண்டிப்பு குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். புதிய நபர்கள் அறிமுகம் ஆகலாம். அவர்களில் நல்லவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது. ஆன்மீக வழிபாடு உங்களைக் காக்கும். கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி அணுகுவது நன்மை தரும். கவனமாக  அணுகினால் உங்கள் வெற்றிக்கு வழி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று உங்கள் நலனில் அக்கறை உள்ள நபர்கள் சொல்லும் அறிவுரைகளை தவறாமல் கேளுங்கள். அதை நல்ல வழியில் பயன் படுத்திக் கொள்ளுங்கள். மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் போது கவனம் தேவை. நற்பெயர் பெற தகுந்த சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

துலாம்:
இன்று மேலிடம் கொடுக்கும் வேலையை கவனத்துடன் செய்யுங்கள். இதனால் மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவியைப் பெற அதிகமான பணம் செலவழிக்க வேண்டி வரும். தேவையற்ற வழியில் பணம் செலவழிப்பதைத் தவிர்த்து கவனமுடன் செயல் படுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

விருச்சிகம்:
இன்று அரசியல் துறையினருக்கு அவமான சூழ்நிலை ஏற்படலாம். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் அவமானத்தை தவிர்க்கலாம். அரசு சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் அரசின் பார்வை உங்கள் மீதே இருக்கும் சூழல் உருவாகலாம். பகைவர்களும் நண்பர்களாகும் வாய்ப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

தனுசு:
இன்று தங்கள் தேவைக்காக நண்பர்களாகும் குணம் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். எந்த காரியத்திலும் நிதானமாக செயல்படுங்கள் அனுகூலமான நாளாகவே இருக்கிறது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மிகப்பெரிய  தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

மகரம்:
இன்று வாய்ப்புகளும், அவற்றை விரும்பி உபயோகிக்கும் சிந்தனைகளும் உருவாகும். உயர்ந்த வாழ்க்கை உருவாகும். நல்ல நண்பர்களால் குடும்பத்திற்கு தகுந்த நேரத்தில் உதவி கிடைக்கும். வீடு, மனை, வாகனம் போன்ற இனங்களில் அனுகூலம் உண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:
இன்று குலதெய்வத்தின் அருளும், நல்லோர்களின் ஆசியும் தாராளமாக கிடைக்கும். மனிதாபிமான செயல்களினால் புகழ்பெறும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. உடலிலிருந்த சிறுசிறு பிணிகள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். கடன் மற்றும் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை படிபடியக நீங்கிவிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:
இன்று கணவன் மனைவி ஒற்றுமையில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தந்தைவழி உறவினர்களால சிரமங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். தொழில் வாய்ப்புகள் நன்னிலை பெறும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7