திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (06-03-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று உங்கள் முயற்சிக்கேற்ற வரவைப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகளில் வெற்றியும் கிட்டும். உங்களைப் பிரிந்துசென்ற சொந்தம் திடீரென தேடிவந்து சேரும். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மறைந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் போடுவார்கள். அது எதிர்பார்த்தபடி லாபமும் தரும்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5, 9

மிதுனம்:
இன்று வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் காரியத்தில் வெற்றிகாணலாம். அவசரம் காட்டினால் நஷ்டத்தைக் கொண்டு வரும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

கடகம்:
இன்று உறவினர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் மருத்துவச் செலவைக் குறைக்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்துநீங்கும். தொழிலதிபர்கள் சந்தையில் அதிக போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 5

சிம்மம்:
இன்று வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

கன்னி:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 7

துலாம்:
இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 1, 6, 9

விருச்சிகம்:
புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும்.வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

தனுசு:
இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 5, 9

மகரம்:
இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 2, 7

கும்பம்:
இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5

மீனம்:
இன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9