இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-09-2019)!

மேஷம் :  இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.   எதிர்பார்த்த நல்ல  விஷயங்கள் நடந்தேறும். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும்.

பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது  நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி  நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து  காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
 
ரிஷபம் 
 
இன்று இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.  பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும்  அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். புதிதாக வண்டி வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.  ஆனால் இப்போதைக்கு அதை ஒத்திப்போடுவது நல்லது.  தூர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் காதுக்கு இனிமையாக இருக்கும். சக  ஊழியர்களிடம் இருந்து உதவி கிடைப்பது மனநிறைவைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 
மிதுனம் 
 
இன்று அவ்வப்போது சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு எளிய மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதை  தவிர்த்திடுங்கள். வழக்கு ஏதேனும் இருப்பின் அது உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை  ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள்.  எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக  இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 
கடகம் 
 
இன்று கடின உழைப்பு உழைக்க வேண்டி இருக்கும். அந்த உழைப்புக்கு ஏற்ற பலனும் இருக்கும். நல்லோர் ஒருவர் உங்களுக்கு  உறுதுணையாக இருப்பார். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர்  அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம்  இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
 
சிம்மம் 
 
இன்று கை மறதியாக பணத்தையோ, பொருளையோ வைத்து விட்டு பின்பு தேடிக் கொண்டே இருக்க நேரிடும்.  தொழிலில் பாதிப்பு  இருக்காது. இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
கன்னி 
 
இன்று அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனம் தேவை.காலை, மாலை இரு வேளைகளிலும் கோவிலுக்குச் சென்று வாருங்கள். மனதில்  ஏதோ ஒருவகையில் சஞ்சலமும், குழப்பமும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வழியில் தொல்லைகள் வரலாம். செலவை  குறைப்பதன் மூலம்  பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை  உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல்  இருந்த தடுமாற்றம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 
துலாம் 
 
இன்று சிறு விஷயத்திற்கு கூட பெரிதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். தாங்களே எதிர்பாராத வகையில் ஒரிடத்திலிருந்து நல்ல செய்தி  வரும். ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்பவர்கள் தக்க லாபத்தை அடையலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும்.  பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம்.  பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
விருச்சிகம் 
 
இன்று மனதில் சஞ்சலங்கள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை இருக்காது. வீட்டிற்குத் தேவையான  பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினை குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.  பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும்  சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 
 
தனுசு 
 
இன்று சிலர் சாதாரணமாக அறிவுரை வழங்கினாலும் அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு கிடைக்க  வேண்டிய பண வரவு, இதர சலுகைகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை  காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
 
மகரம் 
 
இன்று ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். அதனால் மனம் நிம்மதி பெறும். உற்றார் - உறவினர் உங்களுக்குச் சாதகமாகவே நடந்து  கொள்வார்கள். புதிய முயற்சிகளில் கால் வைக்க திட்டமிருப்பின் அதை நிறைவேற்றலாம். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம்  அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால்  செலவும் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
கும்பம் 
 
இன்று நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணலாம். என்றாலும் சில அத்தியாவசியமான செலவுகளை உங்களால் தவிர்க்க முடியாது. சிறு  வியாபாரிகளுக்கு விற்பனையும், வருமானமும் அதிகரித்து காணப்படும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த  காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே  கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
மீனம் 
 
இன்று உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள்.  உங்கள் குடும்பத்தாரின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு  குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை எழக்  கூடும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும்  வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். முக்கிய நபர்களின் உதவி  கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும்.  அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :