சத்குருவின் பார்வையில் டெல்லி பலாத்காரம்!

FILE

ஈஷா யோகா மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இந்தக் கேள்வியை ஒருவர் சத்குருவிடம் எழுப்ப, பாலியல் பலாத்காரம் பற்றியும், இது ஏன் நிகழ்கிறது, இதைத் தடுப்பதற்கு வழிகள் என்ன என்றும் சத்குரு சொன்னதலிருந்து சில உங்களுக்காக...

ஏன் பாலியல் பலாத்காரம்?

பலாத்காரம் செய்வதற்கு பாலியல் தூண்டுதல் ஒரு காரணம் என்றாலும், பாலுணர்வு மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற உந்துதலால் இது ஏற்படுகிறது. ஒன்றை அடைய வேண்டும் என்கிற வெறிக்கு பல காரணங்கள் உண்டு. ஆண்கள், அதிலும் இளைஞர்களின் மனதில், பெண்களை ஒரு போகப்பொருளாக, உடைமையாக்கிக் கொள்ளக் கூடிய பொருளாக சித்தரித்து இருப்பது இன்று எல்லா சமூகங்களிலும் நடைபெறும் அடிப்படைத் தவறு. ஒரு பெண் என்பவள் சுய அறிவோ, மனமோ, விருப்பு வெறுப்போ இல்லாத ஒரு ஜடம் என்ற எண்ணம் எங்கோ அடிமனதில் வேரூன்றி இருக்கிறது. சில இடங்களில் இது விழிப்போடு விதைக்கப் பட்டிருக்கிறது, பல இடங்களில் விழிப்பில்லாமல் இந்த எண்ணம் ஊடுறுவி இருக்கிறது. எது எப்படியோ, இந்த எண்ணம் மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

இதெல்லாம் போதாதென்று, இன்று கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மிகப் பிரபலமான ‘கற்பழிக்கும்’ வீடியோ கேம்கள் இருக்கிறதாம். இதில் மிகப் பிரபலமான ஒரு வீடியோ கேமில், ஒரு பெண்மணி தன்னுடைய இரு மகள்களோடு இரயில் நிலையத்தில் இரயிலுக்காகக் காத்திருக்கிறார். அந்தப் பெண்னை எப்படி பலாத்காரம் செய்வது என்பதே விளையாட்டு. இதில் வெற்றி அடைந்துவிட்டால், விளையாட்டின் அடுத்த நிலையாக இரு மகள்களில் ஒருவர் கிடைப்பார். இந்த வீடியோ கேமை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இது விற்றும் தீர்ந்துவிட்டது.

இரகசியமாக பலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவ்விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குரூரமான, சீக்குப்பிடித்த ஒரு உலகை ஊட்டி வளர்த்துவிட்டு, இது போன்ற சம்பவங்கள் நிஜத்தில் நடக்கக் கூடாது என்றால், அது சாத்தியமாகுமா என்ன? இப்படிப்பட்ட மனநிலையில் நாம் இருக்கும் வரை, இது போன்ற சம்பவங்கள் நடக்கும், நடக்கத்தான் செய்யும்.

நமது தலைநகரத்தில், ஒரு பேருந்தில் இந்த பலாத்காரம் நடந்திருப்பதால் பெரும் குற்றம் என்று திக்கெட்டிலும் கதறுகிறார்கள். காட்டுத் தீப்போல் மக்களிடையே ஆக்ரோஷமும் எதிர்ப்பும் எழும்பியிருக்கிறது. நிச்சயமாக இது தேவைதான், ஆனால் இந்த சம்பவம் ஊர் பேர் தெரியாத ஒரு இடத்திலோ குக்கிராமத்திலோ நடந்திருந்தால் புள்ளிவிவரங்களில் மட்டுமே இருந்திருக்கும். புகார் செய்ய எவரும் முன்வரவில்லை என்றால், புள்ளிவிவரங்களில்கூட காணாமல் போயிருக்கும்.
Webdunia|
23 வயதான ஒரு இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தேசம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மூர்க்கத்தனமான, மிருகத்தனமான தாக்குதலால் அந்தப் பெண்ணிற்கு கடுமையான உள்காயங்களுடன், மூளைச் சேதமும், நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், 13 நாட்கள் போராட்டத்திற்குப் பின் அவர் உயிர் இழந்தார்.
இந்நிலையில், அனைத்துத் தரப்பு இந்தியர்களும் இக்கொடூரத்தை செய்த அந்த 6 நபர்களுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக விரை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தத் தீர்வு சரியானதாகத் தெரிந்தாலும், சட்ட ஒழுங்கினால் மட்டுமே நம் சமுதாயத்தில் வேர் விட்டு பரவியிருக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியுமா? “இல்லை” என்கிறார் சத்குரு. “கணக்கெடுப்புகள், 96% பாலியல் பலாத்காரங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் நடப்பதாகச் சொல்கின்றன. இது சட்டத்தின் முன் வருவதேயில்லை. அதனால் இப்பிரச்சனையை சட்ட ஒழுங்கினால் தடுக்க முடியாது, “உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் மனநிலையால்” நிகழ்கிறது என்கிறார் சத்குரு.


இதில் மேலும் படிக்கவும் :