Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கெட்ட கொழுப்பை கரைத்திட உதவும் சூரிய முத்திரை!

Widgets Magazine

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இதற்குத்துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.

 
நமது மோதிர விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி  இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக  பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும்.
 
சூரிய முத்திரையினால் ஏற்படும் பயன்கள்:
 
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.
ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.
தைராய்டு நோயை நீக்கும்.
தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும்.
 
பஞ்சபூதங்களில் ஒன்றான தீ, கழிவுகளை எரித்து அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த  முத்திரைக்கு,‘சூரியமுத்திரை’என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும்  உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத்  துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
 
முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்தபின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து  முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும். நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு,  நீர்க்கடுப்பு, வாய்ப்புண், வெள்ளைப்படுதல், கண்சிவப்பு, ஒற்றைத்தலைவலி ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள், இந்த  முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நோயை விரட்டும் யோக முத்திரைகளை தினமும் செய்தால்...

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் ...

news

பர்வதாசனம் செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்!

யோக கலையால் உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர ...

news

ஜெயிஷ்டிகாசனம் - யோகாசனம்

குப்புறப் படுத்து, நெற்றி தரையில் தொடும் படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த ...

news

மத்ஸ்ய கிரிடாசனம்

வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது ...

Widgets Magazine Widgets Magazine