1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (14:23 IST)

லண்டன் வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக இன்டிபென்டன்ட் நாளிதழில் எழுதிய கடிதம்

லண்டனிலுள்ள 'ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்' மற்றும் 'ஆக்ஸ்போர்டு', 'கேம்பிரிட்ஜ்' பல்கலைக்கழகங்கள் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாகும். இங்கு பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 75 பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மோடிக்கு எதிராக பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பேராசிரியர் சீட்டன் பாட் மற்றும் கௌதம் அப்பா தலைமையிலான கல்வியாளர்கள் குழு, லண்டனின் 'இன்டிபென்டன்ட்' நாளிதழில் இந்த பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
 
அதில், "சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளை இழைத்த வரலாறு கொண்ட இந்துத்துவ இயக்கமான ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க் பரிவார் குழுக்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர் நரேந்திர மோடி. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவே செய்யும். 
 
இந்திய மக்கள் அடுத்த அரசை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்க உள்ள இந்த நேரத்தில், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பன்முகவாதம் குறித்த நரேந்திர மோடியின் கருத்துக்கள் எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நரேந்திர மோடியின் எண்ணம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தலைமையிலான சிலர் 'கார்டியன்' நாளிதழுக்கு இதேபோல் மோடிக்கு எதிராக பகிரங்க கடிதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.