வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Webdunia

தேவயானி கோப்ரகடே மீது மீண்டும் மோசடி வழக்கு

நியூயார்க்கில் துணைத்தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே மீது ஏற்கனவே இருந்த மோசடி குற்றச்சாட்டுகள் நீதிமனறத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்ய ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
FILE

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக தேவயானி கோப்ரகடே பணிபுரிந்து வந்தார். இவர் மீது போலி ஆவணங்கள் கொடுத்து விசா மோசடி செய்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டது.

FILE
இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அவர் பொது இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துணை தூதராக இருந்த அவரை அமெரிக்கா அவமரியாதை செய்ததாக இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் எந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்த அமெரிக்கா தேவயானி மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேவயானி மீது விசா மோசடி குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டு, கைது செய்ய ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது