செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 மார்ச் 2014 (17:36 IST)

சிறையில் போதிய வசதி செய்து தர இயலாததால் கைதி விடுதலை

லண்டனை சேர்ந்த 23 வயது இளைஞருக்கு சிறையில் சரியான படுக்கை வசதி செய்து தர முடியாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
 
லண்டனை சேர்ந்த 23 வயது இளைஞர் ஜுட் மெட்கால்ப். இவர் ‘Klinefelter syndrome’ என்ற உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றார்.
Jude Medcalf
அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 6 மாதம் சிறை  தண்டனையும், 12 மாதம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.
 
அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். உடற் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் 7 அடி 2 இன்ச் உயரமும், அதிக உடற்பருமனுடனும் இருந்தார். 
 
இதனால் சிறை அதிகாரிகளால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்து தர முடியவில்லை. மிக குறுகலாக உள்ள சிறை அறையில் உயரமான அவரது அளவுக்கு படுக்கை வசதி செய்து தர இயலவில்லை. 
 
இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உடல் பருமன் நோயினால் அவதிப்படும் ஜூட் மெட்கால்ப்பின் கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி அவரை விடுதலை செய்தார். 
 
ஜூட் மெட்கால்ப் ஏற்கனவே 75 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.