1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (14:49 IST)

குழந்தைக்கு பால் கொடுப்பததற்குத் தடையா - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்

இங்கிலாந்து நாட்டின் வணிக வளாகத்தில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியதற்கு, எதிராக குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்காம் பகுதியில், 25 வயதான வோய்லோட்டோ கெமோர் என்ற இளம்பெண்னின் தந்தை, துணி எடுப்பதற்காக வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் கெமோரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான அவரது குழந்தை பசியால் அழத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
 
எனவே அவர் குழந்தையின் பசியை போக்க பால் கொடுத்தபோது, அங்கு வந்த நிறுவன ஊழியர், வெளியே செல்லுமாறும், இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது என்றும், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.
 
இச்சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த தாய், நிர்வாகத்தினர் இதற்கு கட்டாயமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இவர் இந்நிவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.