வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (13:43 IST)

ஐஸ் பக்கெட் சாலஞ்சிற்கு பிறகு பலியான சிறுவன்

ஸ்காட்லாந்தில் ஒரு சிறுவன் 'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' முடித்தபிறகு நீச்சல் அடிக்க டைவ் செய்து, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உலகெங்கும் பிரபலமாகியுள்ள 'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' -சை பலரும் முயற்சிக்கின்றனர். பிரபலங்கள் உட்பட பலரை இந்த 'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' கவர்ந்துள்ளது.
 
Amyotrophic lateral sclerosis (ALS) என்னும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளவும் நிதி திரட்டுவதற்காக துவங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சாலஞ்ச்'-சில் பங்கேற்பவர் ஒரு பக்கெட்டில் ஐஸ் வாட்டரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊற்றி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை இந்த சாலஞ்ச் மேற்கொள்ள சொல்லவேண்டும். 
 
அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த சாலஞ்ச்-சை மேற்கொள்ள வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டாலர் உதவியாக வழங்க வேண்டும். 
 
இணையத்தில் பரபரப்பாகியுள்ள இந்த சாலஞ்சை மேற்கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெரான் லான்காஸ்டர் என்னும் 17 வயது சிறுவன், அதன் பிறகு நீச்சல் அடிக்க டைவ் செய்துள்ளார். அப்போது நீரில் மூழ்கிய அவர் 4 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.   
 
நியூசிலாந்தை சேர்ந்த 40 வயது வில்லியம்ஸ் தெப்பானியா என்பவர்  இந்த குளியலில் ஈடுபட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.