வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (17:54 IST)

இறுதிசடங்கில் இசைக்கப்பட்ட 'வெட்டிங் பெல்ஸ்'

இங்கிலாந்தில் 70 வருட காலமாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதியர் இயற்கை எய்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் வடக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள கிராட்லி என்ற கிராமத்தில் பெர்ட் - பான்சிலே என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் 2 நாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள். பிறந்ததில் இருந்து ஒரே தெருவில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்த இவர்கள், 1943 ஆம்  ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று திருமணம் செய்துகொண்டனர். 
சுமார் 70 ஆண்டு காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்த இந்த தம்பதி எப்போதும் ஒருவரை ஒருவர் பிரிந்ததில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர். 

இந்நிலையில், 93 வயதான பான்சிலே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 18 ஆம் தேதி மரணமடைந்தார்.

கணவர் மரணமடைந்த 30 நிமிடங்களிலேயே அவரது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கணவர் இறந்த நாளிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து மனைவி உயிரிழந்துள்ளார். 
இதனையடுத்து இவர்கள் மணமுடித்த தேவாலயத்திலேயே இறுதிசடங்கும் நடைபெற்றது. இவர்களது 70 வருட திருமண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும்  வகையில், இவர்களின் இறுதி சடங்கின் போது திருமணத்திற்கு இசைக்கப்படும் 'வெட்டிங் பெல்ஸ்' இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.