வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:18 IST)

ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்

திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து  தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது.
 
‘பால்கஹால்‘ என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை உணவு வகைகளில் கலந்தும், தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம்.
 
இது 7 விதமான சுவைகளில் கிடைக்கும் என்றும்,  அவற்றுக்கு மர்கார்டியா, காஸ்மோபாலிட்டன், பவுடரிடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஆல்கஹால் மற்றும் புகையிலை வரிவிதிப்பு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.