வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (15:43 IST)

அறுந்துபோன காதை ஒட்டவைத்த அட்டைபூச்சிகள்

அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன.
 
அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
 
ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. எனினும் ரத்தஓட்டத்தை சீர்செய்ய முடியவில்லை.
 
அதை சீரமைக்க ஆலோசித்த மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சிகளை கொண்டுவந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சியபோது, தையல் போட்ட இடத்திலிருந்து ஒட்டவைத்த பகுதிக்கு ரத்தம் செல்லத் தொடங்கியது.
 
மேலும், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புதிதாக ரத்தக்குழாய்கள் உருவாகி நிலைமை சீரானது. அதைத்தொடர்ந்து அட்டைபூச்சிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த அறுவைசிகைச்சைக்கு, அட்டைபூச்சிகளை பங்கேற்க செய்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.