1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (11:53 IST)

அமெரிக்காவின் சோளத்துக்கு சீனா தடை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளை சீனா,  நாட்டுமக்களின் நலன்கருதி தெடர்ந்து தடைசெய்து வருகிறது. சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா 3 ஆம் இடம் வகிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சீனா சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.
 
அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
 
எனினும் அமெரிக்காவின் தேசிய விதையூட்ட கூட்டமைப்பு சார்பில், 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.18 ஆயிரம் கோடி) மதிப்புள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுத்துவிட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைளால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதால், இத்தகு உணவுவகைகளை தடைசெய்ய இந்தியாவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.